R.Maheshwary / 2022 மே 04 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளை நகர மத்தியில் உள்ள வீதியானது, பாரியளவில் சேதமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாடசாலை மாணவர்கள், பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு செல்வோர், வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்வோரும் இந்த வீதி சேதமடைந்துள்ளதால் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பதுளை விசாகா வித்தியாலயம், ஊவா பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம், பொலிஸ் சேவை மத்திய நிலையம் என்பவற்றுக்கு பிரவேசிக்கும் ஒரே வீதியும் இதுவென்றும் தெரிவிக்கின்றனர்.
அதேப்போல் பதுளை வெலேகடே முச்சந்தி, பீல்ல கடே முச்சந்தி என்பவற்றைக் கடந்து, மஹியங்கனை வீதி மற்றும் மகா வித்தியாலயம் என்பவற்றுக்குச் செல்லும் குறுகிய வீதி இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர மத்தியிலுள்ள குறித்த வீதி நீண்ட காலமாக சேதமடைந்துள்ளமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago