Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிந்துலை பெரிய ராணிவத்தை தோட்டத்தில் கடந்த 24.07.2023 அன்று தீயினால் 10 வீடுகள் எரிந்து சாம்பலாகியது இதில் பாதிக்கப்பட்டவர்கள் 16 குடும்பங்களை சேர்ந்த 58 பேர் தோட்டத்தில் உள்ள சிறுவர் நிலையத்தில் தங்கவைக்கபட்டனர்
இந்தநிலையில் தோட்ட மக்கள் எரிந்த குடியிருப்புகளுக்கு முன்னால் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பில். 2 மணி நேரம் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட தோட்ட நிர்வாகம் தொண்டு நிறுவனங்கள் அரசியல்வாதிகள் என பலரும் நிவாரண உதவிகளை வழங்கினர்.
தோட்ட நிர்வாகம் மற்றும் அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக வீடுகளை அமைத்து தருவதாக உறுதியளித்தது.
41 நாட்கள் கடந்த போதிலும் எவ்வித உதவிகளும் அரசாங்கம் தோட்ட நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து மக்கள் எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தோட்டத்தில் உள்ள சிறுவர் நிலையத்தில் தொடர்ந்து தங்கியுள்ளனர்.
தற்போது கடும் மழை பெய் அங்கு பிள்ளைகளை வைத்துகொண்டு பல்வேறு இடர்களை சந்திக்கின்றனர்.
தோட்ட நிர்வாகம் அரசியல்வாதிகள் இவர்களுக்கு வீடு கட்டி தருவதாக உறுதி அளித்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அத்தோடு கிறிஸ்தவ சபை மூலம் சுவர் மாத்திரமே வைக்கப்பட்டுள்ளது ..
அதுவும் முழுமையடையாமல் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
துவாரக்ஷான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
6 hours ago
13 Jul 2025
13 Jul 2025