2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

நீராடச் சென்ற மூவர் மரணம்

R.Maheshwary   / 2022 மே 26 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை- தம்பராவ குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

45 வயதான தந்தை, 15 மற்றும் 10 வயதான இரண்டு மகன்மாரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்று (25) பகல் குறித்த மூவரும் நீராடச் சென்று வீடு திரும்பாத நிலையில், வீட்டார் குறித்த குளப் பகுதியில் தேடியுள்ளனர்.

இதன்போதே, மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X