Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2018 ஜூலை 31 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், காசல்ரீ, மவுசாகலை ஆகிய நீர்த்தேகங்களுக்கு, சுமார் 2 இலட்சம் மீன்குஞ்சுகள், நேற்று (30) விடுவிக்கப்பட்டன.
மத்திய மாகாண நன்னீர் மீன்பிடி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கலந்துகொண்டு, மீன் குஞ்சுகளை நீர்த்தேக்கங்களில் விடுவித்தார்.
தேசிய நீர்வளங்கள் அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்படுகின்ற இந்த மீன் இனமானது, ஆறு மாதங்களில் 1 1/2 , 2 கிலோகிராம் வளர்ச்சியடையக் கூடியவை என்றும், ஒரு வருடத்தில், 10 மடங்கு பெருகக்கூடியவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தோட்ட மக்களின் போசணை மட்டத்தை அதிகரிக்கும் நோக்கிலும், காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களை நம்பி வாழ்கின்ற நன்னீர் மீன்பிடிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், இவ்வாறு மீன்குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளனவென, அதிகாரிகள் தெரவித்தனர்.
23 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
2 hours ago