2025 மே 17, சனிக்கிழமை

நுவரெலிய விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2022 டிசெம்பர் 09 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறையில் இருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தினுல் வீதியினை கடக்க முட்பட்ட பாதசாரி ஒருவர் மீது குறித்த பேருந்து மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. நுவரெலியா சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பி,ஏ ரோகித்த பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றன . மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .