Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆ.ரமேஸ் , டி.சந்ரு)
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட் A7 வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு முற்றாக தடை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக இப்பிரதேசத்தில் பெய்த கடும் மழையால், டெஸ்போட் 168 வது மைல் கல் பகுதியில் நேற்று (22) இரவு இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளது .
இதனால், நுவரெலியா , தலவாக்கலை, மற்றும் மெராயா வழியூடாக டயகமைக்கான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, இவ்வீதியின் போக்குவரத்தை சீர்செய்யும் வரை சாரதிகள் மாற்றுவழியை பயன்படுத்துமாறும், நுவரெலியாவுக்கு செல்லும் வாகனங்கள் ரதாலை சந்தி ஊடாக நுவரெலியாவுக்கு செல்லும் குறுக்கு வீதியை பயன்படுத்துமாறும், நானுஓயா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
49 minute ago
2 hours ago
2 hours ago