R.Maheshwary / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் டெங்கு மற்றும் கொரோனா தொற்றுகள் பரவாமல் இப்பிரதேச மக்களை காப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளை பிரதேச சபை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் என தெரிவித்தார்.
அதற்கு சபை உறுப்பினர்களும் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.
அத்துடன் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் சபை உறுப்பினர்களால் முன்வைத்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் அம்பேவெல பிரதேசத்தில் அரச பால் பண்ணை ஒதுக்கீடு இடங்களில் மரக்கறி விவசாயம் மேற்கொள்ள திட்டமிடுவது தொடர்பாக முன்வைக்கப்பட்ட உறுப்பினர்களின் கோரிக்கை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்து அம்பேவெல ,பட்டிபொல விவசாயிகள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
20 minute ago
29 minute ago
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
35 minute ago
41 minute ago