Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 10 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரிக்க கோரி பிரேரணை சமர்ப்பித்து ஒரு வருடத்திற்கு மேலான காலம் கடந்துள்ள நிலையிலும் இன்னும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் குறிப்பிட்டார்.
இப்போது நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் அதிகரிப்பு பகுதியளவில் இடம்பெற்றுள்ள வேளை பிரதேச செயலகங்கள் இல்லாமல் அரச பொதுநிர்வாக சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களின் அதிகரிப்பை எப்போது மேற்கொள்வீர்கள் என துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலரகராஜ் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளின் கேள்வி – பதில் நேரத்தின்போது உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடமே மேற்படி கேள்வியினை முன்வைத்தார்.
இக் கேள்விக்கு பதிலளித்த துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தன,
எல்லை மீள்நிர்ணயம் தொடர்பான சிக்கல்கள் நிலவியதன் காரணமாகவும், உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்காக அவை மீளவவும் பரீசிலிக்கபபட்டபோதும் சில மாற்றங்கள் ஏற்பட்டன.
கம்பஹா மாவட்டத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. எனவே அவற்றை அகில இலங்கை ரீதியாக நாங்கள் அவதானிக்க வேண்டியிருந்தது. எனினும் நுவரெலியா மாவட்டம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைக்கும் கேள்வி நியாயமானது. நாங்கள் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை பத்தாக உயர்ததுவதற்கு விரைவில் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கவுள்ளோம் என பதிலளித்தார்.
இப்போது இருக்கின்ற ஐந்து பிரதேச செயலகங்களை பத்தாக உயர்த்துவதற்கு விரைவில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago