2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும்

R.Maheshwary   / 2022 ஜனவரி 03 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

மலர்ந்திருக்கும் 2022 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட விவசாய மக்களுக்கு மறுமலர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வேண்டும். என இலங்கை விவசாயிகள் சங்க பொது செயலாளர் தனுஸ்கோடி மாதவன் சுரேஸ்  தெரிவித்தார்.

புதிய ஆண்டை சிறப்பிக்கும் வகையில் நுவரெலியாவில் இலங்கை விவசாயிகள் சங்க தலைமை காரியாலயத்தில், நேற்று முன்தினம் (1) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

இரசாயன உங்களுக்கான விலையேற்றம்,பயிர்களுக்கான பூச்சி கொள்ளி,சத்து மருந்துகள் தட்டுப்பாடு ,காலநிலை மாற்றம் இது போன்ற இன்னும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

இந்த நிலையில், விவசாயிகள் மாடுகள் வளர்ப்பில் அதிக ஈடுபாடு கொண்டு அதனூடாக கிடைக்கும் சாணத்தில் உரம் பெற்றுக்கொள்ளுதல், பால் உற்பத்தியை உயர்த்தி,பாலுணவு தயாரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த  வேண்டும் என தெரிவித்த அவர்,

இதற்காக  சங்கத்தில் அங்கத்துவம் பெரும் உறுப்பினர்களுக்கு இலகு தவணையில் ,வங்கி கடன் வசதிகளை ஒழுங்குசெய்து, தரமான மாடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X