Kogilavani / 2021 மே 26 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவிவரும் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினூடாக சுமார் 70 இலட்சம் ரூபாய் செலவில் உதவிகள் வழங்கப்படவுள்ளதாக, மன்றத்தின் போஷகர்களில் ஒருவரான ஆர்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் போதிய வசதிகள் இல்லை என்பதை வைத்திய அதிகாரிகளினூடாகக் கண்டறிந்ததாக தெரிவித்தார்.
இதனால் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் இதனைக் கருத்திற்கொண்டு, வைத்தியசாலைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முதற்கட்டமாக மஸ்கெலியா, பொகவந்தலாவை, டிக்கோயா, கொட்டகலை, லிந்துலை ஆகிய ஐந்து வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
“மலையக மன்றத்தினூடாக உதவிகளை மேற்கொள்ள விரும்புவர்கள், 077-7155 586, 077-3495 630, 077-7631 079 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு எமது சேவையுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
25 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago