R.Maheshwary / 2022 மே 18 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
சீரற்ற காலநிலையினால் இன்று (18) வரை நுவரெலியா மாவட்டத்தில் 151 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்துள்ளார்.
வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்றினால் இந்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன
இதற்கமைய, .நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேரும், அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேரும், கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவிலும் 02 குடும்பங்களைச் சேர்ந்த 06 பேர் ஹங்குரான்கெத்த பிரதேச செயலாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இயற்கை அனர்த்தம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 53 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் வசிக்கும் மக்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைய மிக அவதானத்துடன் செயற்படுமாறும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் மேலும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago