Editorial / 2024 ஜூலை 12 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான கழிவகற்றும் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடப்புஸ்ஸலாவை நோக்கி செல்லும் பிரதான வீதியில் நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வௌ்ளிக்கிழமை (12) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
கண்டி வீதியை நோக்கி பயணித்த நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் பவுஸ்ருடன், ஆவா எளிய பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதுண்டது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கழிவு அகற்றும் பவுஸரை செலுத்தி வந்த சாரதியை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
3 minute ago
15 minute ago
20 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
20 minute ago
28 minute ago