2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நுவரெலியாவில் பதற்றம் தணிந்தது

R.Maheshwary   / 2022 மார்ச் 28 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி சந்ரு

எரிபொருள் கோரி,  இன்றைய தினம் (28) நுவரெலியா- பதுளை வீதியை மறித்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலயம் தடைப்பட்டதுடன், அங்கு பதற்றமான நிலையும் ஏற்பட்டது.

இதனையடுத்து, நுவரெலியா பொலிஸார், அத்தியாவசிய தேவைக்காக வைக்கப்பட்டிருந்த டீசலை,  எரிபொருள் நிரப்பு நிலைய  உரிமையாளருடன் கலந்துரையாடி, வரிசையில் நின்ற வாகனங்களுக்கும் , பொதுமக்களுக்கும் விநியோகித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X