Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 நவம்பர் 22 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்ரு, ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பணியாளர்கள் கடமைகளிலிருந்து விலகியுள்ளதால் பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன், ஏனைய பிரதேச இ.போ.ச பஸ்களும் நுவரெலியாவுக்குச் செல்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா இ.போ.ச பணியாளர்கள் நேற்று (21) மாலையிலிருந்து தமது கடமைகளிலிருந்து விலகியுள்ளனர்.
மத்திய மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் நிர்வகிக்கப்படும் நுவரெலியா பஸ் தரிப்பிடத்துக்குள் தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடும் பஸ்களை நிறுத்துவதை நுவரெலியா பஸ் தரிப்பிட நேர கணிப்பாளரும் தனியார் பஸ் உரிமையாளர்களும் இடமளிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இ.போ.ச பணியாளர்கள் தமது கடமைகளிலிருந்து விலகியுள்ளனர்.
கதிர்காமம், கம்பளை, பண்டாரவளை, ஹொரனை, களுத்துறை, கண்டி மற்றும் தென் பிரதேசங்களுக்கான பெருமளவான இ.போ.ச பஸ்கள் நுவரெலியா நகர் ஊடாக பயணிப்பதுடன், குறித்த பஸ்கள் மற்றும் வெலிமட, கொழும்பு, கதிர்காமம், பதுளை ஊடாக கண்டிக்குச் செல்லும் பஸ்களையும் நுவரெலியா பொது பஸ் தரிப்பிடத்துக்குள் நுழைவதற்கு நேர குறிப்பாளரும் தனியார் பஸ் உரிமையாளர்களும் இடம் வழங்கப்படாமை காரணமாக பஸ் தரிப்பிடத்திலிருந்து அரை கிலோமீற்றர் தூரத்தில் பஸ்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .