2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

’’நுவரெலியாவில் புதிய பிரதேச செயலகங்களை நிறுவுக’’

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலிய மாவட்டத்தில் ஐந்து பிரதேச புதிய செயலகங்களை உருவாக்குவதற்கு பிரகடனம் செய்யப்பட்ட அதே வர்த்தமானியில் வெளியான, காலி மாவட்டத்தில் மூன்று புதிய பிரதேச செயலகங்களும் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், நுவரெலியாவில் அது மறுக்கப்பட்டு ஒரு உப பிரதேச செயலகம் மாத்திரம் திறக்கப்பட்டுள்ளமை அநீதியானதும் பாரபட்சமானதும் ஆகும்.

 அத்துடன், வர்த்தமானியில் பிரகடனம் செய்தவாறு 5 புதிய பிரதேச செயலகங்களையும் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மலையக அரசியல் அரங்கம் பொதுமக்கள் மனுவில் கையொப்பம் இடும் இயக்கத்தை ஆரம்பித்து உள்ளது.

நேற்று முன்தினம் (29)  கொழும்பில் இடம்பெற்ற மலையக அரசியல் அரங்கத்தின்  தலைநகர் செயற்பாடுகளுக்கான அங்குரார்ப்பண கூட்டத்தில்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் உள்ளிட்ட அரங்கத்தின் தலைநகர் செயற்பாட்டாளர்கள் மக்கள் மனுவில் கையொப்பம் இட்டு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தனர். 

நுவரெலிய மாவட்டத்திற்கு என வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்ட  

'ஐந்து புதிய பிரதேச செயலகங்களை அமைப்பதற்கான பொது மக்கள்  மனு' எனும் இந்த கையெழுத்து இயக்கமானது நுவரெலிய மாவட்டம் முழுவதும் வாழும் சகல சமூக ஆர்வலர்களிடம் கொண்டு செல்லப்படுவதுடன், நுவரெலிய மாவட்டத்துக்கு வெளியே வாழும் ஆர்வலர்களின் ஒருமைப்பாட்டை பெறும் பொருட்டு இலத்திரனியல் மனு வடிவிலும் தமிழ் - சிங்களம் - ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் விநியோகம் செய்யப்பட்டு கையொப்பங்கள் பெறப்பட உள்ளன.

மனுவின் பிரதிகள் தேவைப்படுவோர் அரங்கத்தின் பிரதான அமைப்பாளர் ஆர். செந்தூரனைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், கையொப்பத்தை இட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்பதுடன்   இலத்திரனியல் மனுவை செயலாளர் நா. கிருஷ்ண குமாரைத் தொடர்புகொண்டு மின்னஞ்சல் வழியாக பெற முடியும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X