2025 மே 15, வியாழக்கிழமை

நுவரெலியாவில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 08 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

புதிய வரி அறவீட்டுக்கு எதிராக அரச ,தனியார் வங்கி ஊழியர்கள் நுவரெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத்தெரிவித்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

குறிப்பாக அரச மற்றும் தனியார் ஊழியர்களிடம் மாதாந்தம் முறையற்ற வகையில் வரி அறவிடுவதினை எங்கலால் ஏற்க முடியாது. என தெரிவித்து புதிய வரி அறவீட்டுக்கு எதிராக வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் பின்னர் உரிய தீர்வொன்று கிடைக்காவிடின் பாரிய போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்து அனைவரும் கலைந்து சென்றனர் .

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .