2026 மே 06, புதன்கிழமை

நூரளை மாவட்டத்தின் பிரதான நகரங்களில் நெருப்பு விலைக்கு பொருள்கள் விற்பனை

Editorial   / 2020 ஏப்ரல் 10 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

 
நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட பிரதான நகரங்களில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையையும் மீறி, அதிக விலைக்குப் பொருள்கள் விற்பனைச் செய்யப்படுவதாக, நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுவதைத் தமக்குச் சார்பாக பயன்படுத்திக்கொள்ளும் வியாபாரிகள், தொழிலாளர்களின் ஏப்ரல் மாதச் சம்பளத்தை இலக்கு வைத்து, வியாழக்கிழமை (9) நெருப்பு விலைக்கு பொருள்களை விற்பனைச் செய்தனர் என்று, பாhதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஒரு கிலோகிராம் நாட்டரிசி  110 ரூபாய்க்கும் ஒரு கிலோகிராம் பருப்பு   145 ரூபாய்க்கும், டின்மீன் 145 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் வெங்காம் 180 ரூபாய்க்கும், தேங்காய் 80 ரூபாய்க்கும்  ஒரு கிலோகிராம் மிளகாய் தூள் 1,100 ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்பட்டன என்று, நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
நுவரெலியா மாவட்டத்தில், இராகலை, உடப்புஸ்ஸலாவை, கந்தப்பளை, தலவாக்கலை, பூண்டுலோயா, அக்கரப்பத்தனை, டயகம, கொட்டகலை, ஹட்டன் உள்ளிட்ட பிரதான நகரங்களிலேயே, இவ்வாறு பொருள்கள் அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
 
கடும் வரட்சி, ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ளமை போன்ற காரணங்களால், பெருந்தோட்டங்களில், மார்ச் மாதம் ஓரிரு நாள்களே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மார்ச் மாத்துக்குரிய சம்பளம் குறைவாகவே கிடைத்ததாகவும் இவ்வாறான நிலையிலேயே, அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு, வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாகவும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர், 
எனவே, ஊரடங்குத்தளர்த்தப்படும் வேளைகளில், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள், பிரதான நகரங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு, வியாபார நிலையங்களில் கடும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .