2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

நோயாளர்களுக்கான உணவு வழங்கல் நிறுத்தப்படும் அபாயம்

R.Maheshwary   / 2023 ஜனவரி 02 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளாளிகளுக்கு வழங்கப்படும் உணவுக்கான உரிய நிதி வழங்கப்படாமைக் காரணமாக, எதிர்வரும் நாட்களில் குறித்த நோயாளர்களுக்கு உணவை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்திலுள்ள 46 அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு இதுவரை 3 மாதங்களுக்கான உரிய கொடுப்பனவு செலுத்தப்படவில்லை என்றும் இதனால் அவர்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாம் உணவு தயாரிப்புக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யும் இடங்களுக்கு கடனாளிகளாக மாறியுள்ளதாகவும் ஒப்பந்தக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தமக்கான கொடுப்பனவு கிடைக்காவிட்டால்  எதிர்வரும் நாட்களில் நோயாளர்களுக்கு உணவை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் நிஹால் வீரசூரியவிடம் வினவியபோது, இதற்கு தேவையான நிதி தமக்கு உரியமுறையில் இதுவரை கிடைக்கவில்லை என்றும் இதனாலேயே உணவு விநி​யோக ஒப்பந்தக்காரர்களின் கொடுப்பனவை வழங்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனினும், நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இந்தப் பிர​ச்சினை இல்லை என்றும் மாத்தளை, கண்​டி ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளிலும் இந்த நிலையே காணப்படுவதாகவும் தெரிவித்த அவர், ஒப்பந்தக்காரர்களின் கொடுப்பனவுகளை எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் வழங்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .