2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நோயாளர்கள் அவதி

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு 

சுகாதார ஊழியர்கள், மூன்றாவது நாளாகவும்   இன்று (9) முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு  காரணமாக, நுவரெலியா மாவட்டத்திலுள்ள நோயாளர்களும் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தர்.

சுகாதார அமைச்சருடன் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வி அடைந்தமையால், தொழிற்சங்கங்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்தன.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இதற்கமைய, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன வழமைப்போல் செயற்பட்டாலும் மருந்து வழங்கும் பகுதி மூடப்பட்டிருந்தது. இதனால் நோயாளர்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டனர்.

எனினும், வைத்தியசாலையின் அவசர சிகிச்சை, மகப்பேறு பிரிவு  எவ்வித தடைகளும் இன்றி இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது .

இதேவேளை, நுவரெலியா மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்ட  பூஸ்டர் தடுப்பூசி நடவடிக்கையும் இந்த பணிப்புறக்கணிப்பால் பிற்போடப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X