2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பெருந்தோட்டப் பெண்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லும் எண்ணிக்கை அதிகரிப்பு

George   / 2017 மார்ச் 31 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புஸ்பராஜ் குழந்தைவேல்

பெருந்தோட்டங்களை நிர்வகிக்கக் கூடிய  கம்பனிகள் அல்லது அரச நிறுவனங்கள், தேயிலைச் செடிகளை  கவனிக்காமல்  விடுகின்ற நிலமை தற்போது காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் பேசப்பட்டப்போதும், அதனை சீர்ப்படுத்தும் முயற்சியில் தொழிற்சங்களோ அல்லது அரசியல் தலைவர்களோ அக்கறை கொள்ளவில்லை.

இதனால் வறுமைக்கோட்டுக்குள் இருக்கும் தோட்ட தொழிலாளர்கள், பாரிய பொருளாதார பிரச்சிகைக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு தேயிலை தோட்டங்கள் மூடப்படும்போது, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புக்கள் உருவாக்கி கொடுப்பதில் யாரும் சிந்திப்பதில்லை.

இதனால் வெளிநாட்டுக்கு செல்லும் பெருந்தோட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அண்மைக்காலத்தில் பெறப்பட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 90 சதவீதமான பணிப்பெண்கள் பயிற்சி பெறாமல் வீட்டுப் பணிப்பெண்களாக இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

தேயிலை தோட்டங்கள் கைவிடப்படுகின்றமையினால், பெண்கள் வெளிநாட்டு வேலையை தேடிச் செல்வதற்கு நிர்ப்பந்திப்பதற்கு, ஒரு மறைமுக முயற்சியாக இருக்கலாம் என இந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பெண்கள் அரச சேவையில் உள்வாங்கப்படுவது குறைவாக இருப்பது சமூகத்துக்கு பாரிய பாதிப்பாக அமைந்துள்ளது.

பெருந்தோட்ட பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு  செல்வதில் இருந்து தடுத்து நிறுத்துவோம் என அரசியல்வாதிகள் வெறுமனமே பேசிக்கொண்டு உள்ளார்கள் ஆனால் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

ஆதலால் இனியாவது இதனை தடுத்து நிறுத்தும் முகமாக, மாற்றுத் தொழில்வாய்ப்புக்களை தரும் தொழிற்பேட்டைகளை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்விடயம் தொடர்பில் மலையக புத்திஜீவிகள், ஆலோசனைகளையும்  வழிகாட்டல்களையும் வ​ழங்க முன்வர வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .