2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பசறையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 11 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யூரி -மாப்பாகளைப் பகுதியில் துப்பாக்கியுடன் (shot gun) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பசறை -ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, யூரி மாப்பாகளைப் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 54 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அனுமதிப்பத்திரம் இன்றி சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி (short gun) ஒன்றினையும் 6 தோட்டாக்களும் கைப்பற்றப்டுள்ளது. 

குறித்த சந்தேக நபர் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,  சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .