2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

பட்ஜெட்டுக்கு மலையகத்தில் ஜால்ரா

Editorial   / 2023 நவம்பர் 14 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பட்​ஜெட்டில்  நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வரவேற்று, மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்தினர் .

மலையகத்துக்கான பத்தாண்டு கால அபிவிருத்தி திட்டம் குறித்தும் தமது ஆதரவை அவர்கள் வெளிப்படுத்தினர்.

பட்ஜெட்டில் மலையகத்துக்கென நிதியொதுக்கிய நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும், அதற்கான யோசனைகளை முன்வைத்த இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் மலையக மக்கள் நன்றி தெரிவித்தனர்.

'ரணில்  - ஜீவன்' கூட்டணி மலையகத்தில் நிச்சயம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை வந்துள்ளது எனவும், மலையக மக்களும் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டுவருகின்றனர் என்பதற்கு இந்த வரவு - செலவுத் திட்டம் ஒரு சான்று எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

குறிப்பு:

பெருந்தோட்டப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் வீட்டு உரிமை பெறாதவர்களாவர். எனவே, அவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு காணி உரித்தினை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். இதன் ஆரம்ப கட்டமாக 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்பார்க்கின்றேன் என்று பெருந்தோட்ட வீடமைப்பு எனும் தலைப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 பட்ஜெட்டில் முன்மொழிந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X