Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், அண்மையில் நியமிக்கப்பட்ட 527 பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி செயலமர்வு, “திசைமுகப்படுத்தல்” எனும் தொனிப்பொருளில், 14 பயிற்சி நிலையங்களில் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கமைவாக, கம்பளை கல்வி வலையத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.துஷ்யந்தி தலைமையில், 52 பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி, கம்பளை கல்வி வலையத்தில் நடைபெற்றது.
இதன்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாடசாலையின் கட்டமைப்பு, நிர்வாகம், ஆசிரியர் மனப்பாங்கு மாற்றம், தலைமைத்துவம், கற்பித்தல், பாடக்குறிப்பு, நவீன கற்பித்தல் முறைமை, தொழில்நுட்பப் பயன்பாடு, பாடசாலையின் வளப் பயன்பாடு, இணைப் பாடவிதான செயற்பாடுகள், கல்வித்திட்டம், பாடசாலையின் சமூகத் தொடர்பாடு, கற்றல், கற்பித்தல் மேற்பார்வை போன்ற பல விடயங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மிக நீண்ட காலத்துக்குப் பின்னர், ஒரே தடவையில் மத்திய மாகாணத்தில் 723 தமிழ் பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டபோதிலும், நியமனம் பெற்றவர்களில் 527 பட்டதாரிகளே, கடமைகளைப் பொறுப்பேற்று உள்ளனர்.
மிகுதியான 196 பேரில் பெரும்பாலானவர்கள், தமக்கு, உரியப் பாடசாலைகள் கிடைக்கவில்லை என்பதால், கடமைகளை பொறுப்பேற்கவில்லை. எனவே, இவர்களுக்கு, உரிய பாடசாலைகளை வழங்கி, இவர்களை கடமைகளில் இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
38 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025