R.Maheshwary / 2022 ஏப்ரல் 11 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் ஆஸிக்
புத்தாண்டு காலத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பட்டாசு சார்ந்த உற்பத்திகளின் தயாரிப்பு இந்த வருடம் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கண்டி மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பட்டாசு உற்பத்தியாளர்கள்,
2019ஆ்ம் ஆண்டு இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து மிகவும் மோசமான முறையில் பட்டாசு சார்ந்த உற்பத்திகளின் சந்தை பாதிக்கப்பட்டதாகவும் 2020 ஆம் ஆண்டு கொவிட் தொற்று மற்றும் தற்போது முகம் கொடுக்கும் டொலர் பிரச்சினை காரணமாக பட்டாசு உற்பத்தி பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பட்டாசு தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் இராசயன மூலப் பொருட்களின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளதாகவும் சில பொருட்கள் இலங்கையில் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago