2025 மே 15, வியாழக்கிழமை

பணமோசடியில் ஈடுபட்ட மற்றுமொருவர் கைது

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 16 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி  பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒரு சந்தேக நபர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பதுளை பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட இளைஞர்களை இலக்கு வைத்து வெளிநாடுக்கு அனுப்புவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக பதுளை, பசறை, லுணுகலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பாதிக்கப்பட்ட இளைஞர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பில் பதுளை பொலிஸாரால்  இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது, சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேப்போல்   இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  லுணுகலையைச் சேர்ந்த அதிபர் ஒருவரும் லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது, குறித்த அதிபரை எதிர்வரும் 23ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில்  பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின்  43 வயதான காவலாளியை பசறை பொலிஸார்  கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, சந்தேக நபரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .