2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

’பதில் அதிபர்களின் பிரச்சினை குறித்து ஆராயவும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதில் அதிபர்களாகக் கடமையாற்றும் அதிபர்களின் பிரச்சினை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், கல்வி அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், ஆரம்பக் காலத்தில், தமிழ்ப் பாடசாலைகளில் அதிபர்களாகக் கடமையாற்றும் பலர் அதிபர் தரத்தில் இல்லாத போதிலும், அதிபர்களுக்குரிய சலுகைகள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்பட்டதெனச் சுட்டிக்காட்டியதுடன், எனினும் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், பதில் அதிபர்களுக்கான அதிபர் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதெனவும் குறிப்பிட்டார்.

ஊவா மாகாணதில் உள்ள 176 தமிழ்ப் பாடசாலைகளில் 136 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்களே, அதிபர் தரத்தில் உள்ளனர் எனச் சுட்டிக்காட்டிய அவர், மிகுதி 40 பாடசாலைகளிலும், பதில் அதிர்பகளே கடமையாற்றிவருகின்றனர் என்றும், இவர்கள் தூரப் பிரதேசங்களிலிருந்து இருந்து சென்று பதில் அதிபராகக் கடமையாற்றுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

தங்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அதிபர் தரத்தில் இருந்த அனைத்து ஆசிரியர்களும், அவர்களுடைய ஆசிரியர் பணியையும் அதிபர் பணியையும் மேற்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

எனவே, இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .