R.Maheshwary / 2022 மார்ச் 31 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் நுவரெலியா – ராகலை பகுதியில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தனது சகோதரியின் வீட்டிற்கு வருகைத் தந்த நிலையிலேயே அவர் காணாமல் போயுள்ளார்.
20 வயதான கணேசமூர்த்தி காயத்திரி (நித்யா) என்ற யுவதியே மார்ச் மாதம் 07ஆம் திகதி காலை வேளையில் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரியான கணேஷமூர்த்தி துர்கா தெரிவித்தார்.
குறித்த யுவதி காணாமல் போன சம்பவம் தொடர்பில் ராகலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 7ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை பொலிஸார் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அவரது சகோதரி கூறுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணேசமூர்த்தி காயத்திரி தொடர்பான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், 0776320266 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு அவரது உறவினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026