2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பதுளை விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா                         

ஓட்டோவும்  மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேராக மோதி விபத்திற்குள்ளாகியதில், ஆறு பேர் காயங்களுக்குள்ளாகியதுடன், அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து, பதுளை – பசறை பிரதான பாதையில் ஏழாம் மைல் கல்லருகே இன்று இடம்பெற்றுள்ளது.

பதுளைப் பகுதியிலிருந்து பசறை நோக்கி சென்று கொண்டிருந்த ஓட்டோவும்  மொனராகலையிலிருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேராக மோதி விபத்திற்குள்ளாகின.

இவ்விபத்தில் ஓட்டோ சாரதி உள்ளிட்ட ஓட்டோவில்  பயணித்த நால்வரும்  மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் அவருடன் வந்தவரும்  காயங்களுக்குள்ளாகினர்.

காயமடைந்த அனைவரும்  பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X