2025 மே 05, திங்கட்கிழமை

பதுளையில் 8 பேர் தனிமையில்

Gavitha   / 2020 நவம்பர் 22 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

கொழும்பிலிருந்து பதுளைக்கு வந்த எட்டுப்பேர், தத்தமது சொந்த வீடுகளிலேயே, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, பதுளை மாநகர பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பதுளை மாநகர சபைக்குட்பட்ட, பதுளை, பகலகம, கட்டுபெலல்லகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 8 பேர், கொழும்பிலுள்ள தனது உறவினர்களின் வீடுகள் மற்றும் சொந்தத் தேவைகளுக்காக அரசாங்கத் திணைக்களங்களுக்குச் சென்றிருந்தனர். எனினும், இவர்கள் சென்ற பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டமையால், கடந்த சில வாரங்களாக கொழும்பிலேயே தங்கியிருந்த நிலையில், இப்போது சொந்த வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.

14 நாள்களுக்கு சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவரக்ளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் சில தினங்களில், அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X