Editorial / 2024 ஜூலை 22 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அனைத்து மாணவரின் கல்வி மேம்பாட்டிற்காக 'ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024' திட்டத்தின் ஊடாக உதவிகளை வழங்கும் பணி தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 116,000 புலமைப் பரிசில்கள் வழங்கப்பட உள்ளன.
இதில் பதுளை மாவட்டத்தில் உள்ள 6 கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 5,770 புலமைப்பரிசில்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
உயர் தரம் பயிலும் மாணவருக்கு மாதாந்தம் தலா ரூ. 6000 வீதம் 360 புலமைப்பரிசில்களும், தரம் 1 முதல் 11 வரை பயிலும் மாணவருக்கு மாதாந்தம் தலா ரூ.3000 வீதம் 5,410 புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் துறைமுகங்கள், கப்பல், விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபை பங்களிப்பு வழங்கியுள்ளது.


19 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago