Sudharshini / 2016 ஜூன் 08 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்ககலை மேல் பிரிவு தோட்டத்தில், செவ்வாய்க்கிழமை (07) மாலை பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடி வெடித்தமையால் வளர்ப்;பு நாய் ஒன்று உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரவு வேளைகளில் பன்றிகள் பயிர்களை அழித்துச் செல்வதால், அவற்றிடம் இருந்து பயிர்களை காக்கும் நோக்கில் தோட்டங்களில் வெடி வைக்கப்படும்.
அவ்வாறு வைக்கப்பட்ட வெடியை நாய்யொன்று கௌவி எடுத்தபோது அது திடீரென வெடித்துள்ளது. இதனால் நாய் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளது.
மேற்படி தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள், சட்டவிரோத வெடிபொருள் அல்ல என்பதை உறுதி செய்துள்ள லிந்துலை பொலிஸார், இது குறித்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .