2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பயணத்தை தடுத்த பாரிய பாறாங்கல்

Editorial   / 2023 ஒக்டோபர் 09 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான வீதியின் ஒரு பக்கத்துக்கு பாரிய பாறாங்கல் சரிந்து விழுந்ததில் அவ்வீதியின் ஊடாக போக்குவரத்து சில மணிநேரத்துக்கு தடைபட்டிருந்தது.

 இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியின் பரகடுவ திருவாணை பகுதியில் பெரிய கருங்கல் ஒன்று வீதியின் ஒரு பகுதியில் விழுந்தது. இதனால் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்த போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது,   

பாறாங்கல் விழுந்ததில் பிரதான வீதியில்  இருந்த டெலிபோன் லைனின் கம்பங்கள் சரிந்து விழுந்ததுடன் கம்பிகளும் அறுந்து கீழே விழுந்தன. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பாறை விழுந்த பக்கத்தில் உள்ள சிறிய கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. விபத்து இடம்பெற்ற போது அங்கு யாரும் இருக்கவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 விழுந்திருந்த மரக்கிளைகளை அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து அகற்றி, வாகன போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X