R.Maheshwary / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
பல கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மொனராகலை மாவட்ட செயலக வளாகத்தில் வீணாகிப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலக வளாகத்தில் 11 பல்வேறு வகையான வாகனங்கள் மழைக்கு நனைந்து, வெயிலில் காய்ந்து இவ்வாறு வீணாகிப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய லொறி, பௌசர், ஜீப் வண்டிகள் இரண்டு, கெப் வாகனங்கள் 3 இவ்வாறு வீணாகிப் போயுள்ளன.
இவற்றில் சில வாகனங்கள் முழுமையாக வீணாகிப் போயுள்ளதுடன்
இந்த வாகனங்களை ஏலத்தில் விடுவதிலும் இழுத்தடிப்புகள் காணப்படுவதாக செயலகப் பணியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் மொனராகலை பதில் அரசாங்க அதிபரிடம் வினவியபோது, குறித்த வாகனங்கள் தொடர்பில் மோட்டார் வாகன பரிசோதகரிடம் சான்றிதழைப் பெற்று ஏல விற்பனைக்கு விட நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago