2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பயிற்சி நெறியின் நிறைவு நாள்

Freelancer   / 2022 நவம்பர் 11 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீதரராவ்

சப்ரகமுவ மாகாண அரச ஊழியர்களுக்கான தமிழ் மொழி பயிற்சி நெறியின் நிறைவுநாள் நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் குருவிட்ட புஸ்ஸல்ல முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றது.

அரச கரும மொழி திணைக்களமும் சப்ரகமுவ மாகாண சபையும் இணைந்து மேற்படி பயிற்சி நெறியை நடாத்தின.

சப்ரகமுவ மாகாண அரச சேவையை சேர்ந்த 148 பேர் இரண்டு பிரிவுகளாக மேற்படி பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர். முதலாவது பிரிவுக்கு 150 மணித்தியாளமும், இரண்டாவது பிரிவுக்கு 200 மணித்தியாலமும் இப்பயிற்சிநெறி நடைபெற்றது.

மேற்படி பயிற்சி நெறி, ஆசிரியர்களான பெனடிக் ஆசிரிவாதம், பி.பரமசிவம், பி.பழனியான்டி ஆகியோர்களால் நடாத்தப்பட்டது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .