2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பர்தா அணிந்த இளைஞன் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

கண்களைத் தவிர்ந்த, முகத்தை முழுமையாக மூடும் பர்தாவொன்றை அணிந்துக்கொண்டு, பஸ்ஸில் ஏறிய இளைஞனை, பதுளை பொலிஸார் ​இன்று (26) கைது செய்துள்ளனர்.

தெமோதரையைச் சேர்ந்த 26 வயதுடைய எஸ்.ஏ. ஜயவர்த்தன என்ற நபரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பஸ் நிலையத்திலிருந்து, பசறைக்குச் செல்லும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில், பர்தாவை அணிந்துக்கொண்டு, இந்த இளைஞன் ஏறியுள்ளான். எனினும், பர்தாவுடன் இருந்த உருவத்தின் மீது சந்தேகம் கொண்ட பிரயாணிகள், ​அங்கு​ ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த ​பொலிஸாருக்கு, இது குறித்து தகவல்கள் கொடுத்துள்ளனர்.

இதன்போது, குறித்த பர்தா அணிந்த உருவத்திடம் பரிசோதனை மேற்கொண்ட போதே, அது ஒரு ஆண் என்பது, பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

மோசடியில் ஈடுபடும் பொருட்டே, குறித்த இளைஞன், மாறுவேடத்தில், பர்தாவை அணிந்துக்கொண்டு வந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .