Editorial / 2024 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரியா நாட்டிற்கு செல்வதற்கான பரீட்சையில் சித்தியடைந்த 8 இளைஞர்களை கொண்ட குழுவொன்று தமது ஆசிரியருடன் இணைந்து மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அதிலொரு இளைஞன், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பலாங்கொடையில், ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பலாங்கொடை பம்பஹின்ன சமனலவெவ வாவியிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில், வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய யூ.எம்.கமல் பிரசங்க நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கஹவத்த,வெலிகே பொல, பின்னவல,கொடகேவல பிரதேசத்தில் வசிக்கும் 8 இளைஞர்கள் தமது ஆசிரியருடன் அங்கு சென்றுள்ளனர். அதில், மூவர் நீராடியுள்ளனர். ஏனையோர் வாவி கரையிலேயே இருந்துள்ளனர். அம்மூவரும் முதன்முறையாக அவ்விடத்தில் நீராட சென்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மூவரில் ஒருவர் நீரில் மூழ்கியதை அடுத்து ஏனைய இருவரும் அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.அப்போது குறித்த வீதியினூடாக பயணித்த ஏனைய இருவரின் உதவியுடன் இளைஞனை மீட்டெடுத்து பம்பஹின்ன பிரதேச வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். அவர் பலாங்கொடை வைத்தியசாலைக்கு பின்னர் மாற்றப்பட்டார். எனினும், அவ்விளைஞன் ஏற்கெனவே இறந்துவிட்டார் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
உயிரிழந்த இளைஞன் இரத்தினபுரி, கொடகேவல பிரதேசத்தில் உள்ள தனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்து கொரியா நாட்டிற்கு செல்வதற்கான பாடநெறியை கஹவத்தையில் பயின்றுள்ளார்.
சுமார் மூன்று மாதங்கள் பாடநெறியை முடித்துக்கொண்டு, நடைபெற்ற பரீட்சையில் தேர்ச்சி பெற்று கொரியா நாட்டிற்கு செல்ல தகுதியையும் பெற்றுள்ளார்.
மஹிந்த குமார்
33 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago