2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பல இடங்களில் ஆலங்கட்டி மழை

Freelancer   / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

பொகவந்தலாவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

பொகவந்தலாவ நகரிலும் பொகவந்தலாவ ஆரியபுர மற்றும் சிறிபுர பகுதிகளிலும் நேற்று மாலை 4 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்ததாக குறிப்பிடப்படுகின்றது.

பொகவந்தலாவ பிரதேசத்தில் பல இடங்களில் சுமார் 30 நிமிடங்களுக்கு பலத்த மழையும் பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆலங்கட்டி மழை என்பது வானத்திலிருந்து விழும் திடநிலைப் பொழிவாகும். பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி என்கிறோம். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X