2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

Freelancer   / 2022 பெப்ரவரி 13 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பளம் அதிகரிப்பு என்ற நாடகம் காரணமாக நாளுக்கு நாள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார் 

நேப்பியர் கீழ் பிரிவு மற்றும் மேல் பிரிவு சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கும்  நிகழ்வில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

வண்ணங்களும் எண்ணங்களும் மாறிய பொழுதும்  எண்ணங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் தேர்தல் காலங்களில் ஒரு சிலருக்கு தேயிலை இனித்தது இன்று அது கசக்கிறது ஆயிரம் ரூபாய் பெருந்தோட்ட மலையக மக்களுக்கு வழங்கி விட்டதாக மார்தட்டிக்கொள்ளும் ஒருசில அரசியல்வாதிகளுக்கு புரியவில்லை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் இன்னல்கள் ஆயிரம் ரூபாய் அடிப்படை வேதனமாக  வழங்குவதாக கூறி பெருந்தோட்ட மலையக மக்களின் சலுகைகளை இல்லாதொழித்து ஆயிரம் ரூபாய் என்ற போர்வையில் 500 ரூபாய் வழங்குவதே தோட்டக் கம்பனிகளின் கபட நாடகத்தின் உச்சம் பெருந்தோட்டத் தொழிலாளர்களை மனிதராகக் கூட மதிக்காமல் அவர்களால் செய்ய முடியாத வேலை பளுவை அவர்கள் மேல் திணித்து மனிதாபிமானமற்ற ரீதியில் அடாவடி செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.

 அபிவிருத்தி என்ற போர்வையில் பசுத்தோல் போர்த்திய புலிகள் சில பெருந்தோட்ட மலையக மக்களின் இருப்பை சூறையாட முயற்சிக்கின்றார்கள்.

 இவை அனைத்திற்கும் உச்சக்கட்டம் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதையாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதியில் அரசாங்கம் கை வைப்பது பெருந்தோட்ட மக்களை பொருத்தவரை சிறிது சிறிதாக சேமித்து வைத்திருக்கும் ஊழியர் சேமலாப நிதியம் ஊழியர் நம்பிக்கை நிதியயே அவர்களுடைய இறுதி நம்பிக்கை இதில் கிடைக்கும் பணமே பலரது கல்யாணம் வீடு வாகன கனவை  நிர்ணயிக்கிறது.

 அந்த  கனவுகளில்  மண் அள்ளிப் போடும் செயற்பாட்டிலா  அரசாங்கம் ஈடுபடுகின்றது என்ற ஒரு கேள்வி நம் மத்தியில் நிலவுகின்றது.

பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் பொறுப்பற்ற வீதியில் நடந்து கொண்டால் பாராளுமன்றத்திலும் போராட்டங்கள் தொடரும் என அவர் கருத்து தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X