2025 மே 16, வெள்ளிக்கிழமை

பல வருடங்களாக புனரமைப்பை காணாத வீதி

R.Maheshwary   / 2023 ஜனவரி 04 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

எட்டியாந்தோட்டை நகரிலிருந்து சீபொத் ஊடாக நாகஸ்தனை வரையான 5 கிலோமீற்றர் வரையான வீதியானது  பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதனால் குறித்த வீதியூடாக நடந்து செல்வதில் கூட சிரமங்கள் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியூடாக நாவலப்பிட்டியிலிருந்து பெலம்பிட்டிய வரை இரண்டு தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடும் நிலையில் வீதி மிக மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது.

எனவே, குறித்த வீதியை விரைவில் புனரமைப்பு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .