2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பலம் குறையவில்லை சிதறடிக்கப்பட்டுள்ளன: முத்து சிவலிங்கம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிற்சங்கத்தின் பலத்தை ஏனைய தொழிற்சங்கங்கள் சிதறடிக்க செய்துள்ளதே தவிர, எமது தொழிற்சங்கத்தின் பலம் எந்த வகையிலும் குறையவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தமது தொழிற்சங்கத்தின் பலத்தை காட்ட வேண்டுமானால் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினால் தான் புரியும். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யமாட்டோம். பேச்சுவார்த்தையின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் மூலம் மக்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியும்' என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இ.தொ.கா. வுக்கு போதிய பலம் இல்லாமையினாலே சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளதென ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான், கூறியிருந்தமை தொடர்பில் புதன்கிழமை (28) வினவியபோதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

செந்தில் தொண்டமான் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றும் தலைவர் முத்து சிவலிங்களம் மறுப்பு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .