2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பலரும் 99 இல் தப்பினர்: வீதிக்கும் பூட்டு

Editorial   / 2023 ஒக்டோபர் 08 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெய்து வரும் அடை மழையுடன், பெரகல - வெள்ளவாய ஏ4 வீதிக்கு கீழே பிளாக்வுட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை  (08) காலை பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  காலை 8  மணியளவில் வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பலர் 99இல் தப்பியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  வீதியில் பாறைகள்   மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் பகுதி நூறு அடிக்கு மேல் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பண்டாரவளை- எல்ல -வெல்லவாய வீதி மாற்று வீதியாக பயன்படுத்துமாறு மண்சரிவு அபாயம் உள்ளதால் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மாற்றுப் வீதியாக ஹலத்துதென்ன கிராவணகம நிகபோத ஊடாக வெல்லவாய செல்லும் குறுகிய வீதியையும் பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X