Editorial / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவி ரத்ன
மின்சாரம் தாக்கி மரணமடைந்து பல நாட்கயோன சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுவல பிரதேசத்தில் லஹபகடி காட்டுப்பகுதியில் இருந்தே அடையாளம் காணமுடியாத அளவுக்கு சிதைந்திருந்த, கடும் துர்நாற்றம் வீசிய சடலமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
அச்சடலத்தை சோதனைக்கு உட்படுத்திய போது, காற்சட்டை பையில் இருந்து அலைபேசி ஒன்று இருந்துள்ளது. அதிலிருக்கும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது, இறந்தவரின் மகள் பதிலளித்துள்ளார்.
அதன் பின்னரே, இறந்தவர் முருதலாவைச் சேர்ந்த பி. சூரியகொட பிரதேசத்தைச் சேர்ந்த. எம். ரத்நாயக்க 57 வயதான திருமணமானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வீடு உடைப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பல வழக்குகள் இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாத்தளை நீதிமன்றத்தில் மாத்திரம் 45 வழக்குகள் இவருக்கு எதிராக விசாரணையில் உள்ளன. இலங்கை முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது சடலத்துக்கு அருகில் பையொன்று இருந்துள்ளது. அதில், வீடுகளை உடைக்க பயன்படுத்திய கருவிகளான ஸ்க்ரூடிரைவர், ரெஞ்ச், கையுறை போன்ற பொருட்கள் இருந்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டுவழியாக கிராமத்துக்குள் நுழைவதற்காக புகுந்து புதர் வழியே சென்று கொண்டிருந்த போது பன்றிகளை பிடிக்க பொருத்தப்பட்ட மின் கம்பியில் சிக்கி அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இறந்தவரின் சடலத்திற்கு அருகில் மற்றொரு நபரின் செருப்பு ஜோடி காணப்பட்டதால், மின்சாரம் தாக்கிய போது, அவர் அருகில் மேலும் ஒருவர் இருந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஆர்.சி. ராஜபக்சவின் அறிவுறுத்தலின்படி, பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.



2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago