2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பல்கலைக்கழக மாணவியொருவருக்கு மடிக்கணினி அன்பளிப்பு

R.Maheshwary   / 2022 ஜனவரி 02 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் மலையக கிளை  ஏற்பாட்டில், பல்கலைகழக மாணவி ஒருவருக்கு மடிக்கணனி  வழங்கி வைக்கப்பட்டது.

கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் சுவிஸ் கிளை உறுப்பினர்களின் நிதிப்பங்களிப்பில், தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மஸ்கெலியா -   எடம்ஸ்பீக் தோட்டத்தை சேர்ந்த கணேசன் அனுஷா என்ற மாணவிக்கே மடிக்கணனி வழங்கி வைக்கப்பட்டது.

கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தினால் முன்னெடுத்துவரும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தில் கல்வி கற்கும் மலையக பல்கலைக்கழக  மாணவர்களை ஊக்குவிக்கும் திட்டத்தில், ஒன்றாக  இன்றைய தினம்( 02) தெரிவு செய்யப்பட்ட மேற்படி மாணவிக்கு மடிக்கணனி  வழங்கப்பட்டது.

கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் மலையக கிளை ஒருங்கிணைப்பாளர் இரா.இராஜேந்திரன் தலைமையில்,  அட்டன் டைன் ரெஸ்ட் விருந்தகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், முன்னாள் ஆசிரியர் ஆலோசகரும் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் ஆலோசகருமான கே.ராஜசேகர்,  நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் மற்றும் பல்கலைகழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் தெரிவு செய்யப்பட்ட  35  பல்கலைக்கழக மாணவர்களுக்கு, கற்றல் நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில்  அச்சுப்பிரதி (Photocopy) பெற்றுக்கொள்ள ஒரு  வருடத்திற்கு தலா 06 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிராமிய அபிவிருத்தி நிறுவத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X