2025 மே 15, வியாழக்கிழமை

பழைய விலைகளை மறைத்தவர் கைது

R.Maheshwary   / 2023 ஜனவரி 29 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக்க

பிபில நகரில் பாதணி விற்பனை செய்யும் கடையொன்றில் பழைய விலைகளை மறைத்து அதிக விலை ஸ்டிக்கர் ஒட்டி பாதணிகளை விற்பனை செய்த கடை உரிமையாளர் ஒருவர் நுகர்வோர் அதிகாரசபையின் மொனராகலை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் (27)  திகதி குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இவ்வாறு விலை மறைக்கப்பட்ட சுமார் எண்பதாயிரம் ரூபாய் பெறுமதியான  முப்பது ஜோடி பாதணிகளை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில்  கடை உரிமையாளருக்கு எதிராக பிபில நீதவான் நீதிமன்றில் வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .