Gavitha / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துக்கு சபைக்குச் சொந்தமான பஸ்ஸூம் பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன், வட்டவளை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து, ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் பொகவந்தலாவ அந்தோனியார் திருச்சபைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்தவரே தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
54 minute ago