2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பஸ் விபத்தில் 15க்கும் அதிகமானோர் பாதிப்பு

Freelancer   / 2022 டிசெம்பர் 18 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

கண்டி-பண்டாரவளை பிரதான வீதியின் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கு அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்.

கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளையை  நோக்கிச் சென்ற பஸ்ஸூம், பண்டாரவளையிலிருந்து அதே வழியில் கண்டியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துr் சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவித்த போது பலத்த காயங்களுடன் கீர்த்தி பண்டாரபுர கழகத்தின் பிரதேச வைத்தியசாலைக்கும், ஒரு சிலர் வலப்பனை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .