2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

பஸ் விபத்தில் பெண் பலி: 18 பேர் காயம்

Editorial   / 2023 ஒக்டோபர் 20 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பதுளை - மொரஹெல பிரதான வீதியில் உல்பாத ஹண்டி என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான  பேருந்து விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.   சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.   

மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

மீகஹகிவுல பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (20) வாராந்த சந்தை நடைபெறவுள்ளதால் பெருமளவான மக்கள் பேருந்தில் பயணித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X