2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பஸ்ஸூடன் மோதி தடம்புரண்ட பாரவூர்தி

Freelancer   / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி - மாத்தளை வீதியில் அலவத்துகொடை, பலகடுவ பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று தரம்புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

இவ்விபத்து இன்று  (17) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய பஸ் வண்டி ஒன்றில் மோதியே குறித்த பாரவூர்தி தடம்புரண்டுள்ளது.

விபத்தில் பஸ் வண்டிக்கும் பாரவூர்திக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சாரதியும் காயமடைந்துள்ளார்.  

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X