2025 மே 05, திங்கட்கிழமை

‘பாடசாலை மீள்திறப்பை பிற்போடுவது நல்லது’

Gavitha   / 2020 நவம்பர் 22 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்ற நிலையில், நாளை (23), பாடசாலைகளை, மூன்றாம் தவணைக்காக திறக்கும் முடிவை சற்று ஒத்திவைக்குமாறு கோருவதாக, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.  

ஹட்டனில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலையை மீள் திறக்கும் முடிவை, அரசாங்கம் பிற்போடவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் மலையகத்திலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில், பாடசாலைகளைத் திறப்பதற்கான சுகாதார பாதுகாப்பு, தற்போதைய சூழ்நிலையில் இல்லை என்றும் தொற்றுநீக்கல் நடவடிக்கையும் இன்னும் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பாடசாலைகளில், ஒரு மண்டபத்தில் ஐந்து வகுப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இவ்வாறான சூழ்நிலையில், எவ்வாறு சமூக இடைவெளியைப் பேணமுடியும் என்றும் அவர் வினவியுள்ளார்.

இதனாலேயே, பாடசாலையை மீள் திறக்கும் தீர்மானத்தை பிற்போடுமாறு கோருவதாகவும்  அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை,  1,000 ரூபாய் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாகவே ஆயிரம் ரூபா வேண்டும் என்றும் அனைத்த மேலதிகக் கொடுப்பனவுகளை சேர்த்து 1,000 ரூபாய் வழங்குவதற்கான தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

அடிப்படை சம்பளமாக, ஆயிரம் ரூபா வேண்டும் என்றே அமரர். ஆறுமுகன் தொண்டமானும் குறிப்பிட்டிருந்தார் என்றும் எனவு, அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாகவேனும் அரசாங்கம் அதைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கம்பனிகள் இதனை செய்யுமா என்பது கேள்விக்குறியே என்று கூறிய அவர், எனவே, சம்பளம் கைக்கு கிடைக்கும்வரை நம்பமுடியாது என்றும் அதேபோல 2021 பட்ஜட்டில் மக்களுக்கு உரிய நிவாரணம், சலுகைகள் இல்லை என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X