R.Maheshwary / 2022 ஜனவரி 10 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை- விஜய தேசிய பாடசாலைக்கு அருகில், நீதிமன்ற தொகுதியொன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (10) காலை பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை பாதுகாப்பு அமைப்பு என்பன இணைந்து, இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தன.
குறித்த நீதிமன்ற கட்டுமானப் பணிகளை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மாத்தளை மாவட்டத்தில் காணப்படும் மிகவும் பழமையான பௌத்த பாடசாலையான விஜய பாடசாலை, 136 வருடங்களுக்கு முன்னர், ஹென்றி ஸ்டீல் ஒல்கட்டால் உருவாக்கப்பட்ட பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .